"முகவரியில்லாப் புன்சிரிப்பு", Ganeshkumar Ponnalagu

முகத்தில் முழுமதியைக் கொண்டுவந்து 
முல்லைப் பூப்போல முறுவலித்து 
அகத்தில் அன்புதனை அடக்கிவைத்து 
அமுதச் சுவையினையும் கூட்டிவைத்து 
உகந்த உறவெல்லாம் ஒன்றுகூடி 
உள்ளச் சுமைதன்னைப் போக்கினாலும் 
முகவரியில்லாப் புன்சிரிப்பும் 
முற்றும் முழுதாக மாற்றிவிடும்
(வேறு) 
முகத்தோடு முகம்காட்டி 
முறுவலிக்கும் நேரமட்டும் 
அகத்தோடு அகம்கலந்து 
அன்பினைநாம் கொண்டாலும் 
முகவரியும் இதழ்வரியும் 
முழுவதுமாய் மறைந்தால்தான் 
முகத்திலொரு புன்சிரிப்பை
முழுமையாகப்பெற்றிடலாம்

DESCRIPTION FROM HARINI V: Responding to the prompt “The smile with no address”, Ganeshkumar speaks of how sharing kindness and expressing love can help to spread and experience true happiness.

/ Ganeshkumar Ponnalagu was born in Vellikkurichi from Tamilnadu. Ganeshkumar has always been interested in exploring the creative instincts within himself. His boundaries of knowledge in Tamil language and literature were further challenged when he started penning poetry pertaining to society. He is passionate about writing poetry; some of his poems have been published in Singapore’s Tamil daily periodical Tamil Murasu and also in the Malaysian Tamil daily periodical Tamil Nesan. Ganeshkumar's aspiration is to become a Tamil language teacher and to impart his knowledge and experience to the younger generation.

READ: "கவிதை என் காதல்", Rajendran Rajesh

← READ: "முகவரியில்லாப் புன்சிரிப்பு", Arjunan Mariappan